உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில்,
ஐக்கிய அரபு அமீரக அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததால் பலவிதமான இடர்பாடுகளில் இருந்து அந்த அணி தப்பித்தது.
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்த 'பி' பிரிவு ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் கெயில் போல, டி வில்லியர்ஸ் போல அதிரடி ஆட்டத்தில் களமிறங்கும் கனவில் இருந்த இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
முதலில் பேட் செய்து வரும் ஐக்கிய அரபு அமீரக அணி தற்போது 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
No comments :