உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மாற்றப்பட்டுள்ள 10 முக்கிய விதிமுறைகள் இவைதான்..

துபாய்: வரும் 14ம் தேதி தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் முக்கியமான 10 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான விதிமுறைகள் பவுலர்களுக்கு சாதகமானதாகவும், சில விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் உள்ளன. கடந்த உலக கோப்பை போட்டித் தொடரில் இருந்து எந்த வகையில் நடப்பு தொடர் மாறுபடுகிறது என்பதை பார்ப்போமா.


இரு புது பந்துகள் ஒரே போட்டியில் அதிகபட்சம் இருமுறை புது பந்துகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இதனால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய முடியும்.

4 பீல்டர்கள் மட்டுமே பவர்-பிளே இல்லாத ஓவர்களிலும், உள்வட்டத்தை தாண்டி (30 யார்ட் சர்க்கிளை தாண்டி) அதிகபட்சம் 4 பீல்டர்களைத்தான் நிறுத்தி வைக்க முடியும்.

ரன்னர்களுக்கு அனுமதியில்லை பேட்ஸ்மேன்கள் காயமடைந்துவிட்டதாக கூறி, ரன்னர்கள் வைப்பது வழக்கம். இந்த போட்டித் தொடரில் அதற்கு அனுமதியில்லை. காலில் சுளுக்கு என்றாலும், பெவிலியனுக்கு நடையை கட்ட வேண்டியதுதான். ஐயோடெக்ஸ் போட்டு குணப்படுத்திய பிறகே உள்ளே வர முடியும்.

ஆப்கான் அசத்தல் இந்த உலக கோப்பையில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி களம் காண்கிறது. தகுதி சுற்றில் வெற்றி பெற்று இந்த இடத்திற்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது. சபாஷ்..
சூப்பர் ஓவர் இறுதி போட்டி டிராவில் முடிந்தால், சூப்பர் ஓவர் மூலம் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படும்.


நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு டிஆர்எஸ் எனப்படும், நடுவர் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறை சூப்பர் ஓவரில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே.

தர்ட் அம்பையர்களுக்கு நவீன வசதிகள் ஹாட் ஸ்பாட் கேமராக்கள் மற்றும் ரியல் டைம் ஸ்னிக்கோ மீட்டர்களை மூன்றாம் நடுவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது

பவர் பிளே குறைப்பு முன்பு மூன்று பவர்-பிளே வாய்ப்பு தரப்பட்ட நிலையில், தற்போது அது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் 10 ஓவர்கள் கட்டாய பவர்-பிளேயாக இருக்கும். 5 ஓவர்கள் கொண்ட மற்றொரு பவர்-பிளேயை 40வது ஓவருக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் பேட்டிங் செய்யும் அணி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் குறையும்

பரிசு தொகை அதிகரிப்பு கடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கான பரிசுத் தொகை 8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், இம்முறை அது 10 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறுக்கே ஓடக்கூடாது பேட்ஸ்மேன்கள் ரன்னுக்காக ஓடும்போது, ரன் அவுட் செய்ய முயலும் ஃபீல்டரை இடிப்பதோ, அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டம்புக்கு குறுக்கே மறைத்தபடி ஓடுவதோ தடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே உடலால் பந்தை தடுக்கும் நோக்கத்தில் ஓடினால் பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்க முடியும்

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top