
புதுச்சேரியிலுள்ள அவ்வை திடலில், மோடி அரசின் ஓராண்டு கால சாதனைகள் விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பாரதிய ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருவதாக கூறினார்.
தற்போதைய ஆட்சியில், நாட்டு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கறுப்பு பணத்தை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முழுமையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.








No comments :