சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதி

சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதி

சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று பாரிமுனையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த தடியடியில், சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரசன்னகுமார் (வயது 24), லலித்குமார் (24), வசந்த் (21), தங்கபாண்டி (23), அருண்வேல் (24), வரதராஜ் (19), ராஜ்குமார் (26), விக்னேஷ் (20), சந்தியா (19), விமல் (22), இமானுவேல் (21), சந்தோஷ்குமார் (20), திருநாராயணன் (23), வக்கீல் உதயகுமார் (30) ஆகியோர் உள்பட 14 பேர் ரத்தகாயம் மற்றும் உள்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் வக்கீல் ரஞ்சித்குமார் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த தடியடியின் போது வக்கீல்கள் திருப்பி கல்வீசி தாக்கியதில் போலீஸ்காரர்களுக்கும் உள்காயங்கள் ஏற்பட்டன. அவர்களும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் விவரம் வருமாறு:-

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்.ராஜேந்திரன் (53), போலீஸ்காரர்கள் அலெக்ஸ் பாண்டியன் (28), சுகுமார் (39), சதீஷ்குமார் (26), தனசேகரன் (43), ஆறுமுகம் (28), செல்வக்குமார் (21), ஞானமூர்த்தி (23), பள்ளிகொண்ட பெருமாள் (32), இளைஞர் காவல்படை போலீஸ்காரர்கள் தீபக் (21), குமார் (26)

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top