
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வெளிநாடுகளுக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளைக் காணும்
இந்திய மக்களுக்கு போட்டியின் போது கொறிக்க இதுவரை பீட்சாவும் பர்கரும் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக, மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முதல் இந்திய ரசிகர்களுக்காக, சூடான சமோசா விற்பனை தொடங்கியுள்ளது.
இது குறித்து மைதானத்தை வலம் வரும் விற்பனை பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “சமீபத்தில் நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா போட்டியின் போது இந்திய மக்கள் வெள்ளம் ஸ்டேடியத்தில் அலைமோதியது. அப்போதுதான் இந்திய மக்களுக்காக பிரத்தியேகமாக சமோசா கொண்டு வரும் ஐடியா தோன்றியது. என் அனுபவத்தில் ஸ்டேடியத்தில் அலைந்தபடி சமோசாவை விற்பது இதுவே முதல் முறை” என்றார்.
2 சமோசாக்களின் விலை 5.66 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 250 ரூபாய்). சிக்கன் ஹாட் டாக் மற்றும் சிக்கன் பர்கரும் இதே விலைக்குதான் விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கும் காய்கறிகளையும் வைத்து உருவாக்கப்படும் சமோசாவும் சிக்கன் பர்கரும் ஒரே விலையா? என்று சில ரசிகர்கள் கொந்தளித்தாலும், எப்படியோ இருந்த இடத்திலேயே, ஆவி பறக்க சமோசா கிடைப்பதால் சூடாக வாங்கி உள்ளே தள்ளுகின்றனர். இருந்தாலும் 250 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் சமோசாவுக்கு சட்னியே வைப்பதில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் இந்திய ரசிகர்கள்..
No comments :