விஞ்ஞானத்தை விஞ்சிய விதி

நினைத்ததொன்று, ஆனால் நடந்தது இன்னொன்று என்று எம்மில் பலர் புலம்புவதுண்டு.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் ஆச்சரியத்தின் உச்சக்கட்டத்துக்கே சென்று விடுவதுமுண்டு. மருத்துவ உலகம் எவ்வளவுதான் முன்னேற்றமடைந்தாலும் அதனால் விதியை வெல்ல முடியாது என்றே கூறலாம். ஏனெனில் மருத்து உலகின் முடிவுகள் பல சமயங்களில் கைமீறி போவதுண்டு. இப்படியான ஒரு சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. ஸ்கேனிங் சோதனையின் போது, பெண்குழந்தை பிறக்கும் என்று சோதனை முடிவுகள் காட்டிய போதிலும் குழந்தை பிறக்கும் போது, ஆணாக பிறந்த சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன்,   வைத்தியர்களும் ஆச்சரியமடைந்துள்ளனராம். இந்த தம்பதியினரின் முதலாவது குழந்தை, பெண் குழந்தை என்று ஸ்கேனிங் சோதனை மூலம் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கப்போகின்றமையால், அதற்கென ஓர் அறையை பெற்றோர் தயார் செய்துள்ளனர். அதற்கு இளஞ்சிவப்பு வர்ணபூச்சு பூசியுள்ளனர். குழந்தைக்கான உடை, படுக்கை என அனைத்து பொருட்களையும் இளஞ்சிவப்பு நிறத்திலேயே வாங்கியுள்ளனர். அதைவிட குழந்தை பிறப்பதற்கு முன்பே, போ (Bo) என்ற பெயரையும் அதற்கு சூட்டிவிட்டனர். தமக்கு பெண் குழந்தை பிறக்க போகின்றதென உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரசவத்தின் பின்பு தாய் கண்விழித்து எனது மகள் எங்கே என வைத்தியரை கேட்டுள்ளார். அதற்கு வைத்தியர்கள் 'உங்களுக்கு மகன்தான் பிறந்துள்ளான்' என பதலளித்துள்ளார். இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், குழம்பியும்போயுள்ளனர். 'எமது ஸ்கேனிங் சோதனை எப்போதும் பிழைத்ததில்லை. ஆனால் இந்த சம்பவத்தை எங்களால் நம்பவே முடியவில்லை' என வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top