உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் பட்டியலில் மோடி-சத்யார்த்திக்கு இடம்


அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகையான பார்ச்சூன், உலகின் மிகச்சிறந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


வருடந்தோறும் அரசியல், வியாபாரம் மற்றும் மனிதநேய நடவடிக்கைகளில் மிகச்சிறந்த பங்காற்றிய பெண்கள் மற்றும் ஆண்கள் என 50 பேரை பார்ச்சூன் பத்திரிகை ஆய்வு செய்து பட்டியலிடுகிறது. அப்பட்டியலில் தான் மோடிக்கும், சத்யார்த்திக்கும் இடம் கிடைத்துள்ளது. 

இப்பட்டியலில் முதலிடத்தை ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் பிடித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்சின் மரணத்திற்கு பின் தனது திறமையான நடவடிக்கைகளால் ஆச்சர்யமளிக்கும் வகையில் அந்நிறுவனத்தின் தகுதியை மேலும் உயத்தியதாக டிம் குக்கிற்கு பாராட்டு பத்திரம் தந்துள்ளது.

இப்பட்டியலில் 2வது இடத்தை ஐரோப்பா மத்திய வங்கி தலைவர் மரியோ ட்ராகியும், 3வது இடத்தை ஜின்பிங்கும், 4வது இடத்தை போப் பிரான்சிசும், 5வது இடத்தை நரேந்திர மோடியும் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் கைலாஷ் சத்யார்த்திக்கு 28வது இடம் கிடைத்துள்ளது.

பிரதமர் மோடியை பற்றி அந்த பார்ச்சூன் குறிப்பிடுகையில், பொருளாதாரம் சரிந்திருந்த நிலையில் ஆட்சியை பிடித்துள்ள மோடி விரைவாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்வதாகவும், பெண்களின் பிரச்சனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவதாகவும், நாடு முழுவதும் கழிவறைகளை கட்டும் திட்டத்தை ஊக்குவித்து வருவதாகவும், ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவு மேலும் வலுப்பட தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி கடந்த 30 வருடங்களாக குழந்தை தொழிலாளர் முறையை கடுமையாக எதிர்த்து போராடி வருவதாகவும், உலக அளவில் 83,000 குழந்தைகளின் உரிமையை பாதுகாத்துள்ளதாகவும் பார்ச்சூன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top