48-வது இடம் பிடித்த இந்திய பாஸ்போர்ட் உலகின் வலிமையான பயண ஆவண பட்டியலில்.


உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வேயின் முடிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் வலிமையான 50 பயண ஆவணங்களின் பட்டியலில் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு 48-வது இடம் கிடைத்துள்ளது. 


இந்த உலகில் நாடு கடந்து செல்லும் ஒருவனின் அடையாளமாக இருப்பது அவனது பாஸ்போர்ட்டே, விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு போகும் வசதி, பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம், பாஸ்போர்ட் கிடைப்பதற்காக ஆகும் நேரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் தலைசிறந்த 50 நாடுகளின் பாஸ்போர்ட்டை ஜெர்மனியைச் சேர்ந்த 'கோ யூரோ’ என்ற பயண ஒப்பீட்டு இணையதளம் பட்டியலிட்டுள்ளது.

52 இலவச-விசா நாடுகள், 1510 ரூபாய் விண்ணப்ப கட்டனத்தில் விண்ணப்பித்த 87 மணி நேரத்திற்குள் கிடைக்கும் இந்திய பாஸ்போர்ட்டுக்கு இந்த பட்டியலின் இறுதியில் 48-வது இடம் கிடைத்துள்ளது. 

174 இலவச-விசா நாடுகள், 2700 ரூபாய் விண்ணப்ப கட்டனத்தில் விண்ணப்பித்த ஒரு மணி நேரத்திற்குள் கிடைக்கும் சுவீடன் நாட்டு பாஸ்போர்ட்டுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. பின்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top