
மெல்பர்ன் நகரில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 வது முறையாக ஆஸ்திரேலியா கோப்பை வென்றது.
இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை அங்குள்ள டெலிவிஷன் சானல்கள் பேட்டி கண்டன வீரர்கள் ஓவ்வொருவரையும் பேட்டி கண்டன.
அப்போது இந்திய கிரிக்கேட் அணியில் லிட்டில் மாஸ்டர் என ழைக்க்படும் சச்சின் தெண்டுல்கர் பரிசளிப்பு விழாவுக்கு ஐ.சி.சி நிர்வாகிகளுடன் மைதானத்திற்குள் சென்று கொண்டு இருந்தார். அப்போது டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்து கொண்டு இருந்த 26-வயது நிரமபிய ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளின் மேக்ஸ் வெல் பேட்டியை அப்படியே விட்டுவிட்டு வந்து சச்சினைன் கையை குலுக்கி கட்டி தழுவினார். பின்னர் தொடர்ந்து பேட்டி அளிக்க சென்றார். இந்த நெகிழ்ச்சியான காட்சியில் பார்த்தவர்கள வியந்தனர்.
இந்த வீடியோ யூடியூபில் வெளியாக லட்சகணக்கான பேர் பார்த்து உள்ளனர்.இப்போது மட்டுமல்ல எப்போதும் மேக்ஸ் வெல் சச்சினிடம் மிகுந்த மரியாதை உடைவர் என்பதை நிருபித்து உள்ளார்.
No comments :