
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஃபிளமிங்கோ பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. பறவைகளைக் காண வனத்துறை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, தொலைநோக்கிக் கருவி, பார்வையாளர் கோபுரம் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கோதண்டராமர் கோவில் கடற்கரைப் பகுதி அருகே கடல் நீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வருடம் தோறும் நவம்பர் மாத இறுதியில் இனப் பெருக்கத்திற்காக ஃபிளமிங்கோ பறவைகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு பருவ மழை மாற்றத்தால் பறவைகள் தாமதமாக வந்துள்ளன








No comments :