சிலி நாட்டில் 53 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 34 பயணிகளுடன் ஓசார்னோவில் இருந்து சான்டியாகோவுக்கு சென்ற இந்த விமானம் கடந்த 1961ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி காணாமல் போனது. இந்த விமானத்தில் சிலியின் பிரபல கிரீன் கிராஸ் என்ற கால்பந்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் இருந்தனர். இதனிடையில் சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மாலே பகுதியில் உள்ள மலையில் இந்த விமானத்தின் பாகங்கள் இருந்ததாக மலையேறும் வீரர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
No comments :