தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை ‘அயன்’, ‘கோ’ ஆகிய படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தை நாளை வெளியிடவுள்ளனர்.தனுஷ் படங்களிலேயே ‘அனேகன்’தான் அதிக திரையரங்குகளில் திரையிடவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை உலகம் முழுவதும் தமிழில் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இந்தியை தவிர்த்து மற்ற மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது.
இந்தியில் தனுஷ் நடித்துள்ள ‘ஷமிதாப்’ படம் கடந்த பிப்ரவரி 6-ந் தேதி வெளியானது. இது ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.








No comments :