
லீக் சுற்றில் இங்கிலாந்து (58), அயர்லாந்து (50), நெதர்லாந்து (51) அணிகளுக்கு எதிரான ‘ஹாட்ரிக்’ அரைசதம் கடந்த இவர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் போட்டியில் சதம் (113) அடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியில் அரைசதம் கடந்து (57) அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 2 விக்கெட் கைப்பற்றினார். இலங்கைக்கு எதிரான பைனலில், 21 ரன், 2 விக்கெட் கைப்பற்றி, இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கினார்.
பின், நுரையீரல் கேன்சர் கட்டியால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்ட இவர், மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். ஆனாலும் எதிர்பார்த்தபடி சிறப்பாக செயல்பட முடியாததால், உலக கோப்பை தொடருக்கான அணியில் இம்முறை இடம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
அதிக விக்கெட்
கடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி (8 போட்டி), இந்தியாவின் ஜாகிர் கான் (9 போட்டி) முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் தலா 21 விக்கெட் வீழ்த்தினர்.
No comments :