புதுடெல்லி.
இலங்கை புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய வாழ்த்துக்கடிதத்துக்கு சிறிசேனா நன்றி தெரிவித்து பதில் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- நமது இரு நாட்டுக்கும் இடையே உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்த நினைக்கும் உங்களின் விருப்பத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். இருதரப்பு மக்களின் நலனுக்காக இருநாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி நம் உறவுகளை புதிய உச்சத்துக்கு எடுத்துசெல்வதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.இலங்கை அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நீங்கள் எனக்கு அளித்த வாழ்த்துக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த இலங்கை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் பரஸ்பரமாக மக்களின் நலனுக்காக இருநாட்டு உறவுகளை புதிய உச்சத்துக்கு எடுத்து செல்ல விரும்புவதாகவும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

No comments :