இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் பயிற்சி கிரிக்கெட் இன்று நடக்கிறது

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் வருகிற 15-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அதற்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் அனுபவம் இல்லாத, புதுமுக அணியான ஆப்கானிஸ்தானை இன்று அடிலெய்டில் எதிர்கொள்கிறது. முந்தைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் 371 ரன்களை அள்ளி கொடுத்ததால் இந்திய கேப்டன் டோனி கடும் அதிருப்திக்குள்ளானார். உலக கோப்பைக்கு முன்பாக சரியான லெவன் அணியை அடையாளம் காண முடியாமல் அவர் தவிக்கிறார். இந்த ஆட்டத்தையாவது இந்திய வீரர்கள் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை 50 ஓவர்கள் முழுமையாக தாக்குப்பிடித்து விளையாட முயற்சிப்பார்கள். அந்த அணியின் கேப்டன் முகமது நபி கூறுகையில், ‘கடந்த 4-5 மாதங்களாக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். உலககோப்பையில் லீக் சுற்றை தாண்டுவதே எங்களது குறிக்கோள்’ என்றார்.

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அயர்லாந்து-ஸ்காட்லாந்து (இந்திய நேரப்படி காலை 9 மணி) இடையிலான இன்னொரு பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெறுகிறது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top