வாஷிங்டன்,
டெல்லி சட்டசபை தேர்தலில் ‘ஆம் ஆத்மி’ கட்சி பெற்ற வெற்றி, ஓர் அரசியல் பூகம்பம் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் புகழாரம் சூட்டி உள்ளது. புதிய அரசியல் கட்சியால், பிரதமர் மோடியின் கட்சி நசுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.
‘மோடி பிரதமரான பிறகு, பா.ஜனதாவுக்கு முதலாவது அரசியல் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. அக்கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி ஏற்பட்டுள்ளது’ என்று மற்றொரு பிரபல அமெரிக்க பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ கூறியுள்ளது.
அமெரிக்க செய்தி சேனலான சி.என்.என்., ‘மேலே சென்ற எல்லாமே கீழே வந்துதான் ஆக வேண்டும்’ என்ற ஐசக் நியூட்டனின் விதியை சுட்டிக்காட்டி, பா.ஜனதாவின் தோல்வியை வர்ணித்துள்ளது.
இங்கிலாந்து செய்தி சேனலான பி.பி.சி., பிரதமர் மோடிக்கு முதலாவது பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.
லண்டனின் ‘தி டெலிகிராப்’ பத்திரிகை, பா.ஜனதாவுக்கு அவமானகரமான சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும், ‘‘கார்டியன்’ பத்திரிகை, மோடிக்கு பலத்த அடி என்றும் கூறியுள்ளன.

No comments :