தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டநாயனார் மகாசபை தலைவர் எஸ்.மாரிச்செல்வம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து, 13-ந்தேதி (நாளை மறுநாள்) வெளிவர இருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை தணிக்கை செய்தபோது வண்ணார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்படாமல் விடப்பட்டுள்ளன.
இதனால் ‘அனேகன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரியும், சில காட்சிகளை நீக்கக்கோரியும் தணிக்கை குழு அதிகாரிகளிடம் கடந்த 4-ந்தேதி புகார் மனு கொடுத்தேன். அந்த மனு மீது அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே 13-ந்தேதி திரையிட இருக்கும் அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments :