புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னணி வகித்து வருகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
முன்னணி நிலவரம்:
ஆம் ஆத்மி 35
பா.ஜ.க. 11
காங்கிரஸ் 4
மற்றவை 0
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.முன்னணி நிலவரம்:
ஆம் ஆத்மி 35
பா.ஜ.க. 11
காங்கிரஸ் 4
மற்றவை 0
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக அமைந்து உள்ளன. அதிக பட்சமாக அக்கட்சி 53 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனாலும், பா.ஜ.க. எடுத்த கருத்து கணிப்பில், அந்த கட்சிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிலவும் கடும் போட்டி காரணமாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் அதிகபட்சமாக 5 இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிலவும் கடும் போட்டி காரணமாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் அதிகபட்சமாக 5 இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

No comments :