உலகைச்சுற்றி.......

 உலகைச்சுற்றி........

பிரான்சில் கடந்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப்பின், நாடு முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதன் பலனாக தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 8 பேரை தெற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள டவ்லவுஸ் மற்றும் அல்பி மண்டலங்களில் இருந்து போலீசார் நேற்று கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் பாரீசின் வடக்கு பகுதிகளில் இருந்தும் 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ரோமின் புறநகர் பகுதியான சாந்திநகரில் பெரு, ஈக்வெடார் நாடுகளை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். நேற்று அந்த வழியாக சென்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ், திடீரென அந்த பகுதிக்கு சென்று அங்குள்ள ஏழை மக்களை சந்தித்தார். தங்கள் குடிசைப் பகுதிகளுக்கு போப் திடீரென வந்ததால், அங்கிருந்த ஏழைகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவரும் அந்த மக்களுடன் நகைச்சுவையுடன் பேசி மகிழ்ந்தார்.

* ஈராக்கில் அடிக்கடி நடைபெறும் குண்டுவெடிப்புகளில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். தலைநகர் பாக்தாத் அருகே காதிமியாவில் உள்ள சோதனைச் சாவடியிலும், புறநகர் பகுதி ஒன்றிலும் நேற்று இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவங்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

* சூடானில் தெற்கு கோர்டோபோன் மற்றும் நீலநைல் பகுதிகளில் இயங்கி வரும் சில கிளர்ச்சி குழுக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றன. இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 3 ஊழியர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top