லண்டன் சென்ற இந்திய விமானத்தை நடுவானில் கடத்த நடந்த சதி முறியடிப்பு?



லண்டன் செல்லும்  ஏர் இந்திய விமானத்திற்கு சொந்தமான விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிக்கபட்டு உள்ளது என ஜெட் ஏர்வே விமானி இமெயில் மூலம் இந்துஸ்தான் பத்திரிகை அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் மூலம் தெரியவந்து உள்ளது.இதை தொடர்ந்து  பல விமான நிறுவனக்களுக்கும் விமானங்கள் குறித்த எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்துஸ்தான் டைமஸ் பத்திரிகைக்கு ஏர் ஜெட் விமானி ஒருவர்  அனுப்பி உள்ள மெயில் கூறி இருபதாவது:-

ஏர் இந்திய விமானத்தில் ஒரு பயணி திடீர் என  உடல் நிலை பாதிக்கபட்டது போல் நடித்தார். இதை தொடர்ந்து விமானத்தில்  இருந்த 5 பேர் டாக்டர்கள் என கூறி  தாமாகவே முன்வந்தனர்.பயணியை சோதனை செய்த பிறகு அவர்கள் உடனடியாக விமானியை சந்திக்க வேண்டும் என கூறினர் ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கபட்டது.

விமானி டாக்டர்கள் குழுவின் நடவடிக்கையில் சந்தேகத்தை உணர்ந்து அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். உடல் நிலைசரியில்லாதவரை தொடர்ந்து சோதனை நடத்தினர்.டாக்டர்கள் என கூறி  முனவந்த 5 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.மேலும் அவர்களது ஆவணங்களை ஆய்வு செய்கையில் அவை அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது.விமான கட்டுபாட்டு குழுவினர் இது போன்ற  விவரங்களை மற்ற விமான நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பர்.என கூறி உள்ளார்.

இது விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.அனைத்து விமான பணியாளர்களுக்கும் மிகவும் கவனமாக இருக்க எச்சரிக்கை செய்யபட்டு உள்ளனர்.  கண்டிப்பாக விமானம் பறக்கஅனுமதி இல்லாத பகுதிகளில் பறக்காமல் இருக்கவும் விமானதள கொள்கைகளை கடுமையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.என அந்த விமானி கூறி உள்ளார். 

இதை தொடர்ந்து அனுமதி இல்லாத நபர்கள் விமானியின் அறைக்குள் செல்ல கூட்டது என கடுமையான வழிமுறைகள் பினபற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதை உளவுத்துறை அதிகாரிகள் இது அபத்தமான தகவலாகும் என கூறி மறுத்து உள்ளனர்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top