மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஆறாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top