நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாள நாட்டுக்கு பல நாடுகளில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்தும் விமானம் மூலம் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பாகிஸ்தானில் இருந்து வந்த உணவு பொருட்களில் உடனடியாக சாப்பிடும் வகையில் தயார் செய்யப்பட்ட மசாலா கலந்த ரெடிமேடு மாட்டிறைச்சி பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த உணவு பொருட்களை தொட மறுத்துவிட்டனர். பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இதுபற்றி தெரியவந்ததும் அவர்களும் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.
நேபாள நாடு இந்து தர்மத்தை கடைபிடிக்கும் நாடாகும். அங்கு பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டுக்கு பாகிஸ்தானில் இருந்து மாட்டிறைச்சி அனுப்பி வைக்கப்பட்டது பற்றி நேபாள பிரதமருக்கு அரசு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதுபற்றி நேபாள அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், அதில் மாட்டிறைச்சி அனுப்பியது உறுதி செய்யப்பட்டால் இதுபற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








No comments :