இந்தியாவுக்கும் நிலநடுக்க ஆபத்து.




நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மிக பயங்கர நிலநடுக்கம் தாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுவது சகஜமாக இருந்தாலும், இனி ஏற்படக் கூடிய நிலநடுக்கம் இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும்

நேபாளத்தில் கடந்த வாரம் முதல் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம், நிலஅதிர்வு ஆகியவற்றால் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தோண்ட தோண்ட உடல்கள் வந்து கொண்டே உள்ளன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 15,000 எட்டும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என விஞ்ஞானிகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர். இதே போன்று தற்போது இந்தியாவையும் எச்சரித்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கே இந்தியாவில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில் இமயமலைப் பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிகப் பயங்கர நிலநடுக்கம் எப்போதுவேண்டுமானாலும் நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவின் இமயமலைப் பகுதி என்பது 2,500 கி.மீ நீளம் உள்ளது. காஷ்மீர் தொடங்கி வடமேற்கில் அருணாசலப் பிரதேசம் வரை நீண்டுள்ளது. இதில் வடகிழக்கு மாநில

இமயமலைப் பகுதிகளில் நிலநடுக்கத்துக்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிலநடுக்கங்களின் பதிவுகள் அடிப்படையில் பார்த்தால் உத்தர்கண்ட் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என்றே கூறப்படுகிறது. விஞ்ஞானி ஏ.பி.சிங் கூறுகையில், இதற்கு முந்தைய நிலநடுக்க விவரங்களை வைத்துப் பார்த்தால் உத்தர்கண்ட் மற்றும் அசாமில் ரிக்டரில் 8 அல்லது 9 அலகுகள் அளவுக்குப் பதிவாகும். இத்தகைய நிலநடுக்கம் இன்றோ அல்லது 50 ஆண்டுகள் கழித்தோ ஏற்படலாம் என்கிறார். அவர்கள் எச்சரித்துள்ளனர். 

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top