தற்கொலை செய்த மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி.

தேர்வு முடிவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

 ஜோலார்பேட்டை மங்கம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் சசிகலா (17). இவர், ஜெயமாதா நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி விட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
 அப்போது, தான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என்ற பயத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில், மாணவி சசிகலா 579 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 103, ஆங்கிலம்- 89, விலங்கியல்- 88, தாவரவியல்- 80, வேதியியல்- 101, இயற்பியல்- 118.
 தேர்வில் மாணவி தேர்ச்சியடைந்த நிலையில், தேர்வு முடிவுக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top