பேஸ்புக் பதிவில் கட்டுரைகளை தேடி இணைக்கும் புதிய வசதி.

     


இதுவரை பேஸ்புக் பதிவுகளில் கட்டுரைகளை இணைக்க, கட்டுரைகளை கூகிள் போன்ற பிற தேடுபொறிகளில் தேடி அதன் இணைப்பை காப்பி செய்து அதனை பேஸ்புக் பதிவில் பேஸ்ட் செய்ய வேண்டி இருந்தது . இதனை சுலபமாகும் விதத்தில் பேஸ்புக் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது .இந்த வசதி மூலம் கட்டுரைகளை பேஸ்புக்கில் இருந்துகொண்டே பேஸ்புக் பதிவில் இணைக்க முடியும் . இந்த வசதி இப்பொழுது ஐபோன் பயன்படுத்தும் அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் பேஸ்புக் செயலியில் Add Link என்ற புதிய பொத்தான் மூலம் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் . Add Link பொத்தானை அழுத்தி வரும் தேடுபொறியில் கட்டுரைகளை தேடி அதனை சுலபமாக பேஸ்புக் பதிவில் இணைக்கலாம்.

இந்த வசதி விரைவில் அணைத்து பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச் 31 ஆம் தேதியின் படி ஃபேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை 1.44 பில்லியன் ஆக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top