
மெக்ஸிகோ நாட்டின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டியில் உள்ள தேசிய அரங்கில், வேற்று கிரகவாசிகள் பற்றிய நிகழ்ச்சி ஒன்றுக்கு, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் Jaime Maussan ஏற்பாடு செய்திருந்தார். 10 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், நியூ மெக்ஸிகோவில் இறந்துகிடந்த வேற்று கிரகவாசியின் எச்சங்கள் கொண்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 1947 முதல் 1959-ம் ஆண்டுக்குள் இந்த புகைப்படங்களை பிரபல நில அமைப்பியல் ஆய்வாளர் Bernard A. Ray எடுத்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. 1947-ம் ஆண்டு, நியூ மெக்ஸிகோவில் உள்ள ரோஸ்வெல் என்ற இடத்தில் நிகழ்ந்த விமான விபத்தின்போது வேற்றுகிரகவாசி இறந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இந்த புகைப்படங்கள் கொண்ட பெட்டி, அரிசோனாவின் Sedona என்ற இடத்தில், ஒரு வீட்டின் மேல்மாடத்து அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதன் உண்மை தன்மை குறித்து, 5 ஆண்டுகள் தீவிர ஆய்வு நடத்திய பின்னர், புகைப்படத்தில் இருப்பது வேற்றுகிரகவாசிதான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments :