2015 உலக கோப்பை குறித்து இவர்கள்...

 2015 உலக கோப்பை குறித்து இவர்கள்...

“உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட்கோலி, டோனி, ரோகித் சர்மா, ரஹானே ஆகியோர் அடங்கிய வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. ஆனால் பந்து வீச்சாளர்கள் உமேஷ்யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி உள்ளிட்டோர் முந்தைய உலக கோப்பையில் ஜாகீர்கான் செயல்பட்டது போல் சிறப்பாக செயல்பட்டால் தான் இந்திய அணியால் கோப்பையை தக்க வைக்க முடியும். இந்திய அணி 4 பிரதான பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி போன்ற ஒரு ஆல்-ரவுண்டருடனும் களம் காண வேண்டும். பீல்டிங் கட்டுப்பாடு மற்றும் இரண்டு முனையிலும் புதிய பந்துகள் பயன்படுத்துதல் ஆகியவை கடைப்பிடிக்கப்படுவதால், எல்லா போட்டிகளிலும் பிரதான 4 பந்து வீச்சாளர்களில் குறைந்தபட்சம் 3 பேராவது நன்றாக பந்து வீச வேண்டியது அவசியமானதாகும்”

-இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்

“இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் என்பது உலக கோப்பையை விட முக்கியமானதாகும். இரு நாடுகளை சேர்ந்த 130 கோடி மக்களும் இந்த ஆட்டத்தின் முடிவை உன்னிப்பாக பார்ப்பார்கள். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே இரு அணி வீரர்களுக்கும் பதற்றம், அளவுக்கு அதிகமாக பற்றி கொள்வது வாடிக்கையாகும். அத்துடன் வீரர்களின் செயல்பாடும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். உலக கோப்பை போட்டியில் நாங்கள் இதுவரை இந்திய அணியை ஜெயித்தது கிடையாது. ஆனால் கடவுளின் அருளினால் விரைவில் அது நடக்கும்”

-பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்

“இந்த உலக கோப்பை போட்டியில் எந்தெந்த வீரர்களின் ஆட்டம் அருமையாக இருக்கும் என்பதை நான் பட்டியலிட்டு வைத்து இருக்கிறேன். அவர்களின் ஆட்டத்தை களத்தில் காண ஆர்வமாக இருக்கிறேன். பேட்டிங்கில் நான் விரும்பும் வீரர்களில் முதல் நபர் டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா). சமீபத்தில் குறைந்தபந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்த டிவில்லியர்ஸ் ஆட்டத்தை பார்க்கையில் எனது பேட்டிங் போலவே இருக்கிறது. அவரை போன்ற வீரரை எந்தவொரு ஒரு நாள் போட்டி அணியிலும் தவிர்க்க முடியாது. மற்றொரு சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியின் (இந்தியா) ஆட்டத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இளம் வயதிலேயே டெஸ்ட் போட்டியை விட ஒருநாள் போட்டியில் இரு மடங்கு சதம் அடித்து இருக்கும் விராட்கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறை எனக்கு பிடித்ததாகும். மற்றும் அதிரடிக்கு பெயர் போன கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் (இருவரும் ஆஸ்திரேலியா), நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், கடைசி உலக கோப்பையில் விளையாட இருக்கும் சங்கக்கரா (இலங்கை) ஆகியோரின் பேட்டிங்கும் ரசிக்கும் வகையில் இருக்கும்.”

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top