தமிழகத்தில் 19 சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்று உயருகிறது.
இந்நிலையில், தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் கட்டுப் பாட்டில் உள்ள சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சாலைபுதூர், பள்ளி கொண்டா, வாணியம்பாடி, நாங்குநேரி, புதுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத் திரம் உட்பட 19 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் இன்று (ஏப்ரல் 1) முதல் உயர்த்தப்படுகிறது. இதனால் கார், வேன், ஆம்னி பஸ் கட்டணங்கள், கனரக வாகனங்கள், லாரி வாடகை உயர்த்தப்படு கிறது. சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதால், காய்கறிகள், மளிகைப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 43 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தனியார் கட்டுப் பாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடி களில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் கட்டுப் பாட்டில் உள்ள சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சாலைபுதூர், பள்ளி கொண்டா, வாணியம்பாடி, நாங்குநேரி, புதுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத் திரம் உட்பட 19 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் இன்று (ஏப்ரல் 1) முதல் உயர்த்தப்படுகிறது. இதனால் கார், வேன், ஆம்னி பஸ் கட்டணங்கள், கனரக வாகனங்கள், லாரி வாடகை உயர்த்தப்படு கிறது. சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதால், காய்கறிகள், மளிகைப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டண உயர்வை கண்டித்து வேலூர் மாவட்டம் வாலாஜாவில் இன்றும் சென்னை மணலியில் நாளையும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படு கிறது. தொடர்ந்து, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் தெரிவித்தார்.

No comments :