
33 வது லீக் ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 9 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும், 7 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு அணி 7 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளன.
34 வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் களமிறங்க உள்ளன. 8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது.
No comments :