
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத் மிடில்டன் தம்பதியருக்கு கடந்த சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.
பிரசவம் முடிந்த சில மணி நேரத்துக்குள் குட்டி இளவரசியுடன் கென்சிங்டன் அரண்மனைக்கு வந்த இளவரசர் வில்லியம் தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது அரசு குடும்பத்தின் சார்பில் அந்த பெண் குழந்தைக்கு சார்லோட் எலிசபத் டயானா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அரசக் குடும்பத்தின் புதிய வாரிசுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வண்ணம் உள்ளன. குழந்தையின் பெயரில் இருக்கும் எலிசபெத், ராணி இரண்டாம் எலிசபெத்தை நினைவு கூறும் விதமாகவும், டயானா என்ற பெயர் இளவரசர் வில்லியமின் தாயை நினைவுபடுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. சார்லஸ் என்ற ஆண் பெயருக்கு பெண் பெயராக சார்லெட் என வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளவரசர் வில்லியமும், இளவரசி கேத் மிடில்டனும் தங்கள் வாரிசுடன் நேரில் சென்று, ராணி எலிசபெத்திடம் விரைவில் ஆசி பெறுவார்கள் என கூறப்படுகிறது.
No comments :