
இதை குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியில்,”இந்த புதிய வடிவமைப்பில் உள்நுழைவு செயல்பாடு, இரண்டு பகுதிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதல் பக்கத்தில் பயனர் பெயரை (user name) பதிவு செய்ய வேண்டும். பின்னர் கடவுச்சொல்லை (Password) பதிவு செய்ய இரண்டாவது பக்கத்திற்கு திசைமாற்றப்படும்” என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ஜிமெயில் பயனர்கள் பலர், இந்த புதிய வடிவமைப்பு அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஜிமெயிலில் உள்நுழைய வெகு நேரம் எடுப்பதாகவும், இதனால் ஜிமெயில் செயல்பாட்டின் வேகம் குறைந்துள்ளது என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறிய மாற்றம், புதிய அங்கீகார (authentication) செயல்பாட்டின் மூலம் பயனரின் கடவு சொற்கள் பாதுகாக்கவும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்கு வைத்துள்ளோர்களுக்கு குழப்பத்தை போக்கவுமே ஆகும் என கூகுள் தரப்பில் கூறியுள்ளனர்.
No comments :