
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில், அனைவரையும் விடுதலை செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
அவர்கள் மீது கீழ் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில், சொத்துக்களை கணக்கீடு செய்ததில் பிழை இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறினார்.
இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு பற்றி ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்குமாறு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு, கர்நாடக சட்டத் துறை செயலர் செங்கப்பா கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசுக்கு ஆச்சார்யா பரிந்துரை செய்துள்ளார்.








No comments :