டெல்லி விமான நிலையம் உலகிலேயே மிகச்சிறந்த விமான நிலையமாக தேர்வு.




டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சிறந்த சேவைக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 28-ந்தேதி ஜோர்டான் நாட்டில் சர்வதேச விமான கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 4 கோடி பயணிகளை கையாளும் டெல்லி விமான நிலையம் 2014-ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தில் இருந்த டெல்லி விமான நிலையம் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 6 உள்நாட்டு விமானங்களையும், 56 சர்வதேச விமானங்களையும் பிரம்மாண்ட ஏர்பஸ் ஏ380 ரக விமானங்களையும் ஒரே நேரத்தில் கையாளும் அளவுக்கு வசதிகள் உள்ளன.இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு அதிக சேவை வழங்கி வரும் விமான நிலையமாகவும் டெல்லி உள்ளது. உலகிலுள்ள விமான நிலையங்களின் வர்த்தக சங்கமாக 1991-ம் ஆண்டு சர்வதேச விமான கவுன்சில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top