அஜித் மேக்கப் கலைஞர்களுக்கு புதிதாக பல்சர் பைக் வாங்கி கொடுத்தார்.



தமிழ் ரசிகர்களின் இதயங்களில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து அனைவராலும் தல என்று அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் சத்தமின்றி பலருக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்துவருகிறாராம்.


அஜித் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இன்றும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் நடிகராக விளங்கும் அஜித், ஆர்ப்பாட்டமே இல்லாமல் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். ஏழை மாணவ–மாணவிகளுக்கு கல்வி கட்டணம், மருத்துவ சிகிக்சைகளுக்கும் நிதி போன்றவற்றை வழங்கிவரும் இவர், சமீபத்தில் தன் வீட்டில் பணியாற்றுகிறவர்களுக்கு சென்னை அருகே நிலம் வாங்கி வீடுகள் கட்டி கொடுத்துள்ளார். 

தன் வீட்டில் பணியாற்றும் தோட்டக்காரர், சமையல்காரர், டிரைவர் உள்ளிட்டோருக்கு இந்த வீடுகளை கட்டி கொடுத்துள்ளாராம். இப்படி பல உதவிகளை செய்யும் அஜித் தற்போது தன்னுடைய மேக்கப் கலைஞர்களுக்கு புதிதாக பல்சர் பைக் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தி உள்ளார். அந்த பைக்கை மேக்கப்மேன் தனது சமூக வலைதளத்திலும் வெளியிட்டு உள்ளாராம்.

அஜித் தற்போது இயக்குனர் ‘சிறுத்தை’ சிவா இயக்கும் ஒரு புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும் இப்படம் அஜித் நடிக்கும் 56-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top